"இணையதளத்தில் கல்லூரி பெயர் இல்லை" - ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் புகார்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள், உயர் கல்விக்காகவும், வேலை நிமித்தமாகவும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2021-08-31 02:12 GMT
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள், உயர் கல்விக்காகவும், வேலை நிமித்தமாகவும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள்,  உள்நாட்டில் உள்ள உயர்கல்வி படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதனை வெளிநாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்றால் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகார பூர்வமான இணையதளத்தில் வெளிநாடுகளுக்கான பிரிவில் மாணவர்கள் படித்த சம்பந்தப்பட்ட கல்லூரியின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். அந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள எல்லா மருத்துவ கல்லூரிகளின் பெயர்களும் அந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள நிலையில்,  ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் பெயர் இன்னும் இடம் பெறாமல் உள்ளது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், இது  தொடர்பாக 3 முறை தேசிய மருத்துவ ஆணையத்திற்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்