கட்டாய கட்டண வசூலை எதிர்த்து வழக்கு

தனியார் பள்ளிகளில் பெற்றோரை வற்புறுத்தி கல்வி கட்டணம் வசூல் செய்வதற்கு எதிரான வழக்கு குறித்து அடுத்த ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-29 10:31 GMT
தனியார் பள்ளிகளில் பெற்றோரை வற்புறுத்தி கல்வி கட்டணம் வசூல் செய்வதற்கு எதிரான வழக்கு குறித்து அடுத்த ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ளதால், கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது எனவும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள, கடந்தாண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக்கூடாது என்றும்,2021-22ம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்பில் கலந்துக் கொள்ள மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கான உபகரணங்கள், இணையதள வசதியை அரசு அளிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்றும், ஆன்லைன் வகுப்புகளை திறமையாக நடத்த சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவுக்கு அடுத்த வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்