"கொரோனா குணமான பின்னும் உளவியல் பாதிப்பு" - உளவியல் நிபுணர் ஷாலினி ஆலோசனை

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களில் பலருக்கு உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர் ஷாலினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-10 11:54 GMT
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாவட்ட வாரியாக கோவை மாவட்டம் 
தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களில் பலருக்கு உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர் ஷாலினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொரோனா குணமடைந்தவர்கள் பலர், தன்னிடம் ஆலோசனைகளைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கமானவர்களின் கொரோனா மரணங்களால், பயத்தால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுடன் தியான பயிற்சிகளை செய்தால் மன ரீதியான பாதிப்பை தடுக்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்