விருதுநகர், தேனி கொரோனா சிகிச்சை மையம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.

Update: 2021-06-04 11:56 GMT
விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பள்ளி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின், திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், விருதுநகரிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல், தேனி மாவட்டம், கோம்பையில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய கட்டடத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மையத்தில், சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்