சூறாவளி காற்றுடன் கனமழை - 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சேதம்

குடியாத்தம் அருகே சூறாவளி காற்றால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-31 07:21 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், நேற்று மாலை முதல் சூறாவளிக் காற்றுடன், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே, சாமியார் மலைப்பகுதியில் முரளி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த 500 க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள், சாய்ந்து சேதம் அடைந்தன. இது குறித்து பேசிய முரளி, தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதாகவும், இதனால் தனக்கு 2 லட்சம் வரை  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது போல் பலரும் பாதிகப்பட்டுள்ளதால், விவசாயகளின் வாழ்வாதரத்தைக் காக்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்