டவ்-டே, யாஸ் புயலில் சிக்கிய மீனவர்கள் ... அரபிக் கடலில் தப்பி, வங்கக் கடலில் சிக்கினர்...

மீனவர்கள் 23 பேர், பாம்பன் பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பியதால், உறவினர் நிம்மதி அடைந்தனர்.

Update: 2021-05-30 10:38 GMT
டவ்-டே, யாஸ் புயலில் சிக்கிய மீனவர்கள் ... அரபிக் கடலில் தப்பி, வங்கக் கடலில் சிக்கினர்... 

மீனவர்கள் 23 பேர், பாம்பன் பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பியதால், உறவினர்  நிம்மதி அடைந்தனர்.நாகை மீனவர்கள் 32 பேர் 3 படகுகளில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அரபிக்கடலில் உருவான டவ்-தே புயலில் சிக்கி நாகை மீனவர்கள் சென்ற ஒரு படகும் அதிலிருந்த 9, மீனவர்களும் மாயமாகினர். புயலில் சிக்கிய மற்ற 23 மீனவர்கள் லட்சத் தீவில் கரை சேர்ந்தனர். புயல் கரை கடந்ததை தொடர்ந்து இரண்டு படகுகளையும் எடுத்துக் கொண்டு 23 மீனவர்கள் நாகை நோக்கி கரை திரும்பினர். அப்போது மீண்டும் ஏற்பட்ட யாஸ் புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் இவர்கள் தஞ்சமடைந்தனர். மூடப்பட்ட பாம்பன் பாலம் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து நாகை மீனவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பினர். ஆரியநாட்டுத்தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், நாகை துறைமுகத்தை அடைந்த நிலையில், இரு புயல்களின் நடுவே 23 பேர் பத்திரமாக கரை திரும்பியது மீனவர்களின் உறவினர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்