அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் - முதலமைச்சர் அவசர ஆலோசனை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-05-25 06:46 GMT
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்  - முதலமைச்சர் அவசர ஆலோசனை 

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் வருகின்ற மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பொது விநியோகம் திட்டம் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக  முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தலைமை செயலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆலோசனையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தலைமைச்செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.
  
Tags:    

மேலும் செய்திகள்