கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் முதல்வர் நாளை ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.;
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். வருகின்ற மே 18 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் காலை 11 மணி அளவில் காணொலி மூலம் இந்த் ஆலோசனை கூட்டமானது நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் 9 மாநிலங்கள் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதை தொடர்ந்து வருகின்ற 20 ஆம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 54 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மொத்தம் 19 மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.