அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-01-22 02:25 GMT
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியலைத் தவிர்த்து, பிற உயர் படிப்புகளை தேர்வு செய்ய மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதல் இல்லை எனவும், உயர்கல்விக்கான, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பயிற்சி மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்