கலவரம் செய்ய காத்திருந்த 2 கிராமங்கள் - காமெடியாக மாற்றிய போலீசார்

இருதரப்பு மோதலை தக்க சமயத்தில் வந்து தடுத்த ஆயுதப்படை போலீசார், மோதலுக்காக வந்த நபர்களை வைத்தே கலவர ஒத்திகை நடத்தி சென்ற சுவாரஸ்யம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.

Update: 2021-01-18 03:10 GMT
இருதரப்பு மோதலை தக்க சமயத்தில் வந்து தடுத்த ஆயுதப்படை போலீசார், மோதலுக்காக வந்த நபர்களை வைத்தே கலவர ஒத்திகை நடத்தி சென்ற சுவாரஸ்யம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.எஸ்.வி.பாளையம்.... ஊராங்கன்னி... கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள இந்த இருகிராமங்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த‌தாக கூறப்படுகிறது... அந்த மோதலின் நீட்சி காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும் அளவிற்கு சென்றுள்ளது....ஆனால் இது  கலவரம் அல்ல... கலவர ஒத்திகை தான்... இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கலவரம் செய்வதற்காகவே, திட்டமிட்டு, நேரம் குறித்து காத்திருந்த‌ினர் அந்த இரு கிராமங்களை சேர்ந்த சிலர்...ஒத்திகையில் பங்கேற்ற அனைவருமே உண்மையாக கொலை வெறித்தாக்குதல் நடத்துவதற்காகவே அங்கு கூடியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினிமா படங்களில் எல்லாம் முடிந்த பின் வரும் காவலர்கள்... நிஜத்தில் தக்க சமத்தில் வந்த‌தால்,  நடக்கவிருந்த கலவரம் காமெடியாக மாறியிருக்கிறது....இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனும், சூரியும் ஆக்ரோஷமாக மோதலுக்கு தயாராக, நடுவே வரும் முதியவர் ஓரமாக போய் விளையாடுங்கப்பா என காமெடியாக்கி விட்டு செல்வார். அதை போலவே, இரு தரப்பும் சண்டையிட தயாராகி கொண்டிருந்த சமயத்தில், நடுவே வந்த போலீசார், விளையாடி விட்டு போங்கப்பா என மறைமுகமாக கூறியுள்ளனர்..அதாவது, வந்த‌து தான் வந்துவிட்டோம், கலவரம் நடந்தால் எப்படி தடுப்பது என்பதை ஒத்திகை பார்த்துவிட்டு செல்வோமே என நினைத்த போலீசார், கலவரம் செய்ய வந்தவர்களை வைத்தே ஒத்திகை பார்த்து சென்றுள்ளனர்...கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், தக்க சமயத்தில் காவல்துறையினர் வந்த‌தால், இருகிராமங்களுக்கு இடையே நிகழவிருந்த கலவரம் தடுக்கப்பட்டுள்ளது... அதிலும் உச்சமாக இரு கிராம மக்களும் போலீசாருடன் சிரித்துக்கொண்டே சண்டையிட்டுவிட்டு கிளம்பிவிட்டனர்...இவ்வாறு ஒவ்வொரு பிரச்சினைக்கும் போலீசார் தக்க சமயத்தில் வரும் பட்சத்தில், பல பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது...



Tags:    

மேலும் செய்திகள்