குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

Update: 2020-11-15 11:55 GMT
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் பால், பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.  கொரனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்