நீட் : மாணவர்கள் அதிக மதிப்பெண் குவிப்பு எதிரொலி - கட்ஆஃப் மதிப்பெண் 80 வரை அதிகரிக்க வாய்ப்பு

நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண் அளவை 80-வரை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2020-10-21 10:44 GMT
ஏழை மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உயிரை பறித்த நீட் தேர்வில், தற்போது, மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 16ஆம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில், 2-ஆம் முறையாக நீட் எழுதிய மாணவர்கள், 550-க்கும் அதிகமான மதிப்பெண்களை ஏராளமானோர் பெற்றுள்ளனர். இதனிடையே, னால், கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை, ஒவ்வொரு பிரிவிலும் 50 முதல் 80 மதிப்பெண்கள் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு, பொதுப் பிரிவினருக்கு 520 மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 470 மதிப்பெண்ணும் அளவாக இருந்தது. தற்போது, அதிக மாணவர்கள், 550 மதிப்பெண்ணை கடந்துள்ளதால், அனைத்து பாடத்திலும் தலா 80 மதிப்பெண்கள் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே இது கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்