தொழில் முத​லீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம்

தொழில் முதலீடு ஒப்பந்தங்களை துரிதப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.;

Update: 2020-10-21 07:57 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெளிநாடு பயணம் சென்ற முதலமைச்சர் முன்னிலையில் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீட்டில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 55 நிறுவனங்களுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஒற்றைச் சாளர முறையில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பிற அனுமதிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை இன்று மேற்கொள்ளப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்