தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு - மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் வரவேற்பு

தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டதற்கு மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.;

Update: 2020-10-09 06:27 GMT
தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டதற்கு மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்கும் அறிவிப்பையும் விரைவில் வெளியிட வேண்டும் என எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்