"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-09-27 08:37 GMT
தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கோழைத்தனமான இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், 
கொள்கை அடிப்படையில் எதிர்கொள்ள முடியாத தலைவர்கள் மீது காவிச் சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும், சிலையின் பாகங்களை சேதப்படுத்தியும் அவமதிப்பது, அதிகரித்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். கொள்கையை கொள்கையால் எதிர்கொள்ள முடியாத கோழைகளும், மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்களும் தான், இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவார்கள் என்றும்,  அவர்களை தப்பவிடக் கூடாது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

"பெரியார் சிலை அவமதிப்பு - டி.டி.வி தினகரன் கண்டனம்"

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில், பெரியார் சிலை அவமதிப்பிற்கு, அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களின் சிலைகளை இப்படி தொடர்ந்து அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது என்றும், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்  இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் அவர், பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்