சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் - அதிரடி உத்தரவு
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "மண் உருண்ட மேல" என்ற பாடலில், சாதி தொடர்பான வரிகள் இருப்பதாகவும், இதுபோன்ற பாடல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.