முடிவு வெளியிடப்படாத 5,177 மாணவர்கள் - மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டதா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 5 ஆயிரத்து 177 மாணவர்களின் முடிவுகள் விடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-08-10 06:50 GMT
தற்போது வெளியான முடிவுகளில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்ட 5 ஆயிரத்து 177 மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஜூலை 4ஆம் தேதி அப்போதைய தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனால் அவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள கல்வியாளர்கள், தேர்வுத்துறை இது குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்