காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை - மனைவி இறந்த 5வது நாளில் கணவனும் தற்கொலை
சென்னை அடுத்த திருநின்றவூரில் காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தராஜன், பெயின்டராக இருந்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு பட்டாபிராமை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், பவித்ரா அவரது பெற்றோர் வீட்டில் கடந்த 15ந்தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அரவிந்தராஜன் மனைவியை நினைத்து அழுது புலம்பியபடி இருந்துள்ளார். இந்நிலையில் அரவிந்தராஜன் இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரவிந்தராஜன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில், தற்கொலை செய்த மனைவியின் முகத்தை கூட, பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், எனது சாவுக்கு பவித்ராவின் அம்மாவும், அவரது மாமாவும் தான் காரணம் என கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.