கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க பரிந்துரை - You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம்

கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க கோரி You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.;

Update: 2020-07-20 11:01 GMT
கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க கோரி You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. கந்த சஷ்டி குறித்த சர்ச்சை எழுந்ததால் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலை முடக்க வேண்டும் என ஒரு தரப்பினரிடம் இருந்து போலீசாருக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. இதனைத் தொடந்து,  கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க காவல்துறை சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்