1,000 பேருடன் செயல்பட்ட அலுவலகத்தில் 50 பேர் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பரிதாப நிலை

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பரபரப்பாக செயல்பட்ட பி.எஸ்.என்.எல் அலுவலகம் தற்போது 50 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையை அடைந்துள்ளது.;

Update: 2020-07-20 10:47 GMT
நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உயரமான கட்டிடம் என்கிற பெருமையுடன் ஆயிரம் பேர் பணியாற்றிய நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இருந்தது. நகரப் பகுதியில் மட்டும் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட தரை வழி இணைப்புகள் இருந்தன. மாவட்ட அளவில், சுமார் ஒன்றரை லட்சம் தரை வழி இணைப்புகளும்,  2 லட்சத்திற்கு அதிகமான செல்போன் இணைப்புகளும் சேவையில் இருந்தன. இந்த நிலையில், நிறுவனத்தின் பல்வேறு சிக்கல் காரணமாக பணியாளர்களுக்கு  விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலோனர் வேலையிலிருந்து விலகினர். இந்த நிலையில், தற்போது 50 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தொலைபேசி இணைப்புகளும் குறைந்து விட்டன. 7 மாடி கட்டிடத்தில்  50 பேர் மட்டுமே பணியாற்றுவதால், பராமரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்