பாடத்திட்டம் குறைப்பு - சிபிஎஸ்இ விளக்கம்

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பாடப்பகுதிகள், என்.சி.இ.ஆர்.டி. முன்மொழிந்துள்ள மாற்று கல்வி நாட்காட்டி திட்டத்தில் உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-09 02:08 GMT
சிபிஎஸ்இ அளித்துள்ள விளக்கத்தில், 9 முதல் 12 வகுப்புகளுக்கான 190 பாடங்களை, 30% குறைப்பதென்ற முடிவு, 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது. கற்றல் இடைவெளியால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எவ்வித கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது என்றும்,பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த என்சிஇஆர்டி முன்மொழிந்துள்ள மாற்று கல்வி நாட்காட்டி திட்டத்தை கடைப்பிடிக்குமாறு, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் என்சிஇஆர்டி முன்மொழிந்துள்ள மாற்று கல்வி நாட்காட்டி திட்டத்தில் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்