2016-ல் சகோதரர்கள் இருவர் கொலையான வழக்கு - கொலையாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில், 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-07-01 04:22 GMT
கடலூர் அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில், 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் ஏற்பட்ட மோதலில், வினோத்குமார், சதீஷ்குமார் ஆகிய சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டனர். 2016ஆம் ஆண்டு, மே 25ஆம் தேதி, இருவரையும் 10 பேர் கொண்ட கும்பல் ஓடஓட விரட்டி கொலை செய்தது. இதுகுறித்து வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கொலையாளி லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.7,500 அபராதமும் விதித்தார். அவருக்கு துணையாக இருந்த 9 பேருக்கு தலா ஓர் ஆயுள் தண்டனையும், 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்