30ஆம் தேதி வரை இறைச்சி கடைகளுக்கு தடை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் இறைச்சி கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது;
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல, கோழி, ஆடு, மாடு மற்றும் மீன் கடைகள் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறும் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.