சென்னையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

கொரோனோவால் சென்னையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2020-06-16 10:12 GMT
ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாசாலையை சேர்ந்த 67 வயது மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார்.சூளைமேட்டை சேர்ந்த 72 வயது ஆண் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சூளைமேடு ஐயப்பாநகரை  சேர்ந்த 62 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வியாசர்பாடியை சேர்ந்த மூதாட்டி, அயனாவரத்தை சேர்ந்த மூதாட்டி, திருவொற்றியூரை சேர்ந்த முதியவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர் , அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர் என, 22 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்