ஊரடங்கு நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்திய பள்ளிக்கு சீல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பத்தாம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-06-16 02:09 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புது புளியம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளியில், ஊரடங்கு நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. உடனடியாக அந்தப் பள்ளியை வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்த போது,ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்ல இருக்கும் மாணவ மாணவியர் இருபத்தைந்து பேருக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்தது தெரியவந்தது. அரசு விதிமுறையை மீறி செயல்பட்டால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்