கொரோனா அச்சம் - உயில் எழுதும் பெற்றோர்...

கொரோனா அச்சம் காரணமாக முதியவர்கள் தங்கள் சொத்துக்களை வாரிசுகள் பெயரில் உயில் எழுதி வைப்பது அதிகரித்துள்ளது.

Update: 2020-06-14 01:55 GMT
உலகம் முழுக்க லட்சக் கணக்கானவர்களை பலி வாங்கி கொடூரமுகம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். குறிப்பாக, இந்த தொற்று நோயைப் பார்த்து வயதானவர்கள் உச்சகட்ட பீதியில் உள்ளனர். காரணம், கோவிட் 19 பாதிப்பால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோர்தான். கொரோனா தந்திருக்கும் இந்த உயிர்பயம், தமிழகத்தில் பல தரப்பினரையும் உயில் எழுத வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். உயில் எழுதும் நடைமுறை பலவித சொத்துத் தகராறுகளுக்கு தீர்வாக அமையும் என்பது உண்மை. ஆனால், உயில் எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் உள்ளன. அவசரகதியில் அவற்றை மறந்துவிடக் கூடாது என்கிறார்கள் வழக்கறிஞர்கள். பத்திரப்பதிவு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுவதால் உயில் எழுதி வைப்பதற்கு பதில் சிலர் தங்கள் சொத்துக்களை வாரிசுகளின் பெயருக்கு பத்திரப்பதிவும் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், அதை விடவும் உயில் எழுதுவது சிறந்தது என்பதே இந்த வக்கீல்களின் வாதம். உலகெங்கும் அச்சத்தை விதைத்திருக்கும் கொரோனா, நம்மூர் பெரியவர்களிடம் இப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையை தோற்றுவித்திருப்பது பாராட்டுக்குரியதுதான்.
Tags:    

மேலும் செய்திகள்