இடித்துவிட்டு நிற்காமல் சென்ற கார் மீது கோபம் - காரை நொறுக்கி நகைகளை கொள்ளையடித்த நபர்கள்
மதுரை பொன்மேனி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ஜோதிமீனா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம் என்பவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.;
மதுரை பொன்மேனி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ஜோதிமீனா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம் என்பவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகமும் அவர் மகன்களும் காரை துரத்தியபடி ஜோதிமணியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு நின்றிருந்த காரை அடித்து நொறுக்கியதுடன் ஜோதிமணி வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தலைமறைவான ஆறுமுகம் மற்றும் அவர் மகன்களை போலீஸார் தேடி வருகின்றனர்.