அதல பாதாளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் - மத்திய அரசின் தரவரிசையில் 20ஆம் இடம்

தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகம் 20 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Update: 2020-06-11 12:48 GMT
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரவரிசையிலும் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பிரிவில் 12வது இடமும் பொறியியல் கல்லூரிகள் பிரிவில் 14வது இடமும் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 20 ஆம் இடத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளது. இதே தரவரிசையில், தேசிய அளவிலான கல்லூரிகளின் பட்டியலில், சென்னை மாநிலக்கல்லூரி ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்