திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோணபனேந்தல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து, மணல் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கரிசல்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.