"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு" - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் வழங்க உள்ளது.;

Update: 2020-05-20 10:11 GMT
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து, 3  மாதத்தில் அரசுக்கு பரிந்துரை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவி​ன் ​விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் குழுவின் பரிந்துரை முதலமைச்சரிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரிந்துரையை அரசு ஏற்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டிலேயே,  தனி ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள ஆறாயிரம் இடங்களில் 900 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த ஆண்டு நீட் தேர்வை 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் எழுத உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்