வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை - அரசு உறுதி
வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை 9 ஆயிரம் தொழிலாளர்கள் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்களும் ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கி இருக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேட்டுக்கொண்டுள்ளார்.