தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2020-05-01 17:32 GMT
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை,சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30 முதல் 40கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன்  கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்றின் வேகமானது 40கி.மீ முதல் 50கி.மீ வரை வீசக்கூடும் என்பதோடு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்