"மரத்திலேயே கருகும் மொந்தன் வாழை ரகம் : அரசு உதவ வாழை விவசாயிகள் வேண்டுகோள்"

கடலூரில், அறுவடை செய்ய முடியாமல், மொந்தன் வாழை ரகங்கள் மரத்திலேயே கருகி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-27 08:48 GMT
நடுவீரப்பட்டு, பண்ணை குச்சிபாளையம், குமளங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மொந்தன் ரக வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த வாழை மரத்தின் இலை, காய், பூ, தண்டு என அனைத்துமே சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, இந்த வாழைத்தார்கள் அறுவடை செய்ய முடியாமல், மரத்திலேயே பழுத்து கருக தொடங்கிவிட்டன. அந்த பழங்களை வவ்வாலல், மயில், குயில், காகம் உள்ளிட்ட பறவையினங்களுக்கு இரையாகி உள்ளன. இதனால் ஏக்கருக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு, வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டி போட்டுவிட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், இதிலிருந்து மீள தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்