"மார்க்கெட்டுக்கு நேரடியாக வர வேண்டாம்"- கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு வேண்டுகோள்
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.;
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான 15 வகை காய்கறிகள் கொண்ட பேக் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்திற்கு காய்கறிகள் வாங்க சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, இனிமேல் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக சந்தைக்கு நேரடியாக வரவேண்டாம் என்று கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு கேட்டுக்கொண்டுள்ளது.