மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ புது முயற்சி

கொரோனா தொடர்பாக மாற்றுத் திறனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலவச எண் அறிவிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் மூலமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

Update: 2020-03-30 20:14 GMT
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை உணர்ந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இலவச எண்ணான 18004250111 ஐ தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேலும் வாட்ஸ் அப் மூலமாக அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் வகையில் 9700799993 என்ற எண்ணையும்  அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதற்காக சென்னை கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் நல வளாகத்தில் சைகை மொழியில் பேசுவோர் பணியமர்த்தப்பட்டு, வீடியோ கால் மூலமாக கேட்டறிந்து அந்தந்த மாவட்ட உதவி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பரிமாறப்படுகிறது. 

அங்கிருந்து மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்கள் கோரிய உதவிகள் வழங்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு அழைப்புகள் வருவதாகவும், அவர்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படுவதாகவும் மாற்றுத்திறனாளிகள் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்