"அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல அனுமதி பெறலாம்" - சென்னை காவல் துறை
சென்னையில் இருப்பவர்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெறலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.;
சென்னையில் இருப்பவர்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெறலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. அதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்த இணையதளத்தில் சுமார் 5000 பேர் அவசர தேவைக்காக வெளியூர் செல்ல வேண்டும் என விண்ணப்பித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவர்களில், தகுந்த காரணங்களை விசாரித்த பின்னர் 10 நபர்களுக்கு சென்னை மாநகர காவல் துறையினர் அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.