போதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-13 19:59 GMT
மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும்,  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு,  நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது,  மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் எனவும், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.போதையில் வாகனம் ஓட்டியவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்