90 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் - வேன் உரிமையாளரை கைது செய்த போலீஸ்
திருவெறும்பூர் பெல் குடியிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வேன் உரிமையாளர் சுந்தரேசனை கைது செய்தனர்.;
திருவெறும்பூர் பெல் குடியிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வேன் உரிமையாளர் சுந்தரேசனை கைது செய்தனர். பறிமுதல் செய்த புகையிலை பொருட்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடிய வேன் ஓட்டுநர் சுரேஷை, போலீசார் தேடி வருகின்றனர்.