பயிற்சி நிறுவனம் நடத்தி ரூ.6 லட்சம் மோசடி - நிறுவனத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம்

தாம்பரம் அருகே போலி சுயதொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி 600-க்கும் மேற்பட்ட பெண்களிடம் 6 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-03-12 21:09 GMT
சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு பகுதியில், 3 மாதங்களுக்கு முன், மகளிர் சங்கம் தொடங்கிய நபர் ஒருவர், அங்கு பெண்களுக்கு பயிற்சியளித்து, சுயதொழில் வழங்குவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி, 600-க்கும் மேற்பட்ட பெண்கள் தலா 350 ரூபாய் செலுத்தி சங்கத்தில் சேர்ந்துள்ளனர். மேலும், கடன் பெறுவதற்காக என கூறி அவர்களிடம் தலா 1,500 ரூபாய் வசூலித்த அந்த நபர் தீடீரென தலைமறைவாகினார். இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த, பெண்கள், பயிற்றி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மோசடி நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்