மலைவாழ் மக்களுக்கு அரசு வழங்கிய வீடு அபகரிப்பு, மற்றொரு சமூகத்தினர் அடித்து விரட்டியதாக புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் வசித்து வந்த 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

Update: 2020-03-10 21:52 GMT
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வினோபா நகர் பகுதியில், மலைவாழ் மக்களுக்கு  அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்களை மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக  கைக்குழந்தைகளுடன் கோயிலாறு அணைப் பகுதியில் உள்ள அடர்ந்த முட்புதர்களுக்குள், மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்