கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் மாநகர பேருந்துகள்: கொரோனாவை தடுக்க மாநகர போக்குவரத்து கழகம் அதிரடி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

Update: 2020-03-10 19:57 GMT
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.  சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் 3 ஆயிரத்து 400 பேருந்துகளில் 30 லட்சம் பேர் பயணிப்பதாகவும், அவர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, சுகாதாரத்துறை ஆலோசனையின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி, அந்தந்த பணிமனைகளில் நேற்றிரவு முதல் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்