"மதுரையில் கொரோனா அறிகுறியுடன் யாரும் இல்லை" - அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கலால் உதவி ஆணையருக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.;
மதுரை அரசு மருத்துவமனையில், கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கலால் உதவி ஆணையருக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும், கொரோனா பாதிப்பு இல்லாததால் திருப்ப அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார். தற்போதைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் யாரும் சிகிச்சையில் இல்லை என அவர் கூறியுள்ளார்.