விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
கமுதி அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை, கிராம மக்கள் விரட்டியடித்தனர்.;
கமுதி அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை, கிராம மக்கள் விரட்டியடித்தனர். தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக மதுரைக்கு எரிவாயு கொண்டுசெல்ல, இந்தியன் ஆயில் நிறுவனம், குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, ராமநாதபுரம் மாவட்டம் வேப்பங்குளம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று பணிகள் நடைபெறும் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்த ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரிகளை விரட்டியடித்தனர்.