சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு : காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.;
விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் இணைந்து, இரண்டரை லட்சம் ரூபாய் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.