ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-03-06 11:22 GMT
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா  தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நரசிம்மன் மற்றும்  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நீதிபதிகள், எதிர்மனுதாரர் மருது கணேஷ் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பணப்பட்டுவாடா தொடர்பாக ரத்து செய்யப்பட்ட வழக்குகளை மீண்டு சி.பி.ஐ. மூலம் விசாரிக்க உத்தரவிடக்கோரி தி.மு.க.வின் மருது கணேஷ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்