தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு - டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.73.50 ஆக சரிவு

கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச வர்த்தகத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.;

Update: 2020-03-04 14:07 GMT
கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச வர்த்தகத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக 73 ரூபாய் 50 காசுகள் வரை சரிந்து வர்த்தகம் கண்டுள்ளது. பொருளாதாரம் வலுவிழந்து வருவதுடன், வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருவதால் ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர். ரூபாயின் மதிப்பு 2018 ஆம் ஆண்டில் 74 ரூபாய் 50 பைசா வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்