மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

565 கோடி ரூபாய் மதிப்பிலான மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

Update: 2020-03-03 18:44 GMT
மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் இன்று நடைபெறுகிறது. 

565 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.  

இந்த திட்டத்தின்படி சரபங்கா வடிநில பகுதியில் வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியற்றுக்கு மேட்டூர் அணையின் உபரி நீர் மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்