மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - ஸ்மார்ட் சிட்டி பணியின் போது விபத்து
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது மின்சாரம் தாக்கி சரவணன் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.;
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது மின்சாரம் தாக்கி சரவணன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். பழைய பேருந்துநிலைய கட்டடத்தை இடிக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக, மின்வயர் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தஞ்சையில் மட்டும் மொத்தம்14 இடங்களில் 904 கோடி மதிப்பு ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது.