முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் 6 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

Update: 2020-02-28 02:47 GMT
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ரவுடி திவாகரனை  2 நாட்களுக்கு முன்பு 8 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி கொலை செய்தது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், சிவகுமார் உள்ளிட்ட 6 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். முன்விரோதம் காரணமாக திவாகரனை கொலை செய்ய சிலர் திட்டம் தீட்டிவருவதாக  நுண்ணறிவு பிரிவு போலீசார், காசிமேடு ஆய்வாளருக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காததே கொலை நடந்ததற்கு காரணமாக திவாகரன் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்