திருமணமான பெண் மீது ஆசை - ராணுவ வீரரின் மனைவியை தீயிட்டு கொளுத்திய நடத்துனர்
திருமணமான பெண் மீது ஆசை கொண்ட நடத்துனர் அந்த பெண் காதலை ஏற்காததால் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணுவ வீரரான ஜான் விக்டர் என்பவரது மனைவி சலோமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சலோமி , அந்த அலுவலகத்திலேயே இளைஞர் ஒருவரால் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தப்பட்டார். 40 சதவீத தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சலோமியை தீயிட்டு கொளுத்திய இளைஞரை போலீசார் இழுத்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.